Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே ஜாக்கிரதை…. குழந்தைகளுக்கு புதிய வகை வைரஸ் பரவல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கொல்லம் மாவட்டத்தில்  இதுவரை 85 குழந்தைகள் தக்காளி வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதா க சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதான் உருமாற்றம் வைரஸ் என ஆட்டிப்படைத்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் புதிய வகை தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த புதிய வகை காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு  5 வயதுக்கு  உட்பட்ட  குழந்தைகள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் கை, கால், உடல் வலி மற்றும் வெள்ளை நிறமாக மாறுதல்  உள்ளிட்ட பல அறிகுறிகள் இருக்குமாம்.

 

இதனைத் தொடர்ந்து  சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வரும் என்பதால் ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் அமைத்து பொது மக்களிடம் நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மற்றும் கண்காணித்து வருகிறோம். மேலும் இந்த புதிய வகை வைரஸின் பாதிப்பு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு  அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் கவனமாக இருக்கும்படி எச்சரித்து உள்ளனர்.

இந்த நிலையில் புதிய வகை வைரஸான தக்காளி காய்ச்சலால்  கொல்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகளுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள  குழந்தைகளையும் சேர்த்தால்  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |