1981 ஆம் ஆண்டு ஸ்டீவன் கால்ஹான் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்து காரணமாக அந்த துயரத்தில் இருந்து மீள சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பினார். அதனால் நியபோர்ட் ரோட் தீவில் இருந்து கப்பலில் கடல் பயணத்தை மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அந்த கப்பல் நீரில் மூழ்கியது. அதனால் நடுக் கடலில் ஒரு சிறிய படகுடன் தத்தளித்தார். அதுமட்டுமல்லாமல் மூழ்கிப்போன கப்பலில் இருந்த சில பொருள்களை எடுத்து வந்து நடுக்கடலிலேயே தனது வாழ்க்கையை கழித்தார்.
இனிமேல் நம்மால் இங்கிருந்து தப்பிக்க முடியாது என்ற எண்ணத்தில், அங்கு வந்த பறவைகளை சுட்டும் மீன்களை பிடித்தும் பச்சையாக சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார். அவர் தினமும் அங்கு உயிர் வாழ்வதே சவாலாக இருந்தது. ஏனென்றால் அங்கு திமிங்கலங்கள் அவரது படகு மீது மோதி பல சேதங்களை ஏற்படுத்தின. அவரது உயிருக்கும் பல ஆபத்துக்கள் வந்தது. ஏறக்குறைய 75 நாட்களாக இப்படியே தனது வாழ்க்கையை கழித்தார். 75 நாட்களுக்கு பிறகு தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு தீவில் விளக்குகளை கண்டார்.
அது அவருடைய எல்லா நம்பிக்கைகளையும் திரும்பக் கொண்டு வந்தது. மறுநாள் காலை ஒரு மீனவர் குழு அவரை கண்டறிந்து தீவுக்கு வந்த காப்பாற்றியது. 75 நாட்கள் கழித்து 76வது நாட்களாக அவர் மீட்கப்பட்டார். உண்மையிலேயே இது ஒரு அதிசயமான சம்பவம் தான். ஒருவர் எவ்வித உதவியும் இல்லாமல் உணவு தண்ணீருக்குக் கூட அவதிப்பட்டு 76 நாட்கள் உயிர் வாழ்ந்தது சம்பவம் பலரையும் வியக்க வைத்தது.