அம்மா என்ற வார்த்தை களங்கமில்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன் உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக இருக்கும் அம்மா என்ற வார்த்தைதான் அத்தனை உயிரும் சிறப்பும் அடைந்துள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. அம்மாவுக்கு அம்மா அப்படிங்கிற ஒரு சிறப்பு மட்டுமே இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை பகிர்ந்து, கஷ்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அன்புடன் சிரித்து நடந்து கொள்ளும் பாங்கு இத்தனையும் அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காண முடியும்.
அந்த அன்னையை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினம் எப்படி பிறந்தது என்று பார்க்கலாம். அமெரிக்காவைச் சேர்ந்த அண்ணா மரியாஜஸ் ஜெர்வீஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜெர்வீஸ். இவர் தனது அம்மாவின் உந்துதலின் பேரில் அமெரிக்காவில் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக “மதர்ஸ் டே வொர்க் கிளப்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் அடிக்கடி மருத்துவர்களை வரவழைத்து தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, பேணிக்காத்தல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எவ்வாறு? கல்வி கற்பிப்பது போன்ற பயிற்சிகளை அளித்தார்கள்.
ஒருமுறை தனது தாய் நடத்திவந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் போதித்துக் கொண்டிருக்கும் போது “அன்னையை போற்றுவதற்கு ஒருநாள் அன்னையர் தினம் வரும்” என்று பாடி இருந்தது அவரது காதுகளில் கேட்டது அவருடைய நினைவில் வந்து வந்து சென்றது. அவரது அம்மா 1905ஆம் ஆண்டில் இறந்துவிட அவரது ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில் 25 ஆண்டுகள் அவரது அம்மா போதித்து வந்த சர்ச்சுக்கு 1908 ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து அனுப்பினார்.
அந்த தினத்தன்று அன்னையர் தினமாகவே கொண்டாட அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் அமெரிக்காவின் இருபத்தி எட்டாவது அதிபரான நெல்சன் அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி கையெழுத்திட்டார். இதனையடுத்து அன்னையர்களுக்கு மரியாதை அன்பு செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என்றும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அமெரிக்க அரசு அறிவித்தப்படி பிறந்ததுதான் அன்னையர் தினம்.