விக்கல் எப்படி ஏற்படுகிறது..? எதனால் ஏற்படுகிறது?
நடுத்தர வயது உள்ளவர்கள் எல்லோரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகளைக் கடந்து வந்திருப்பார்கள். அந்த உடல்ரீதியான நிகழ்வுகளில் ஒன்றுதான் விக்கல்.
விக்கல் எடுக்கும் பொழுது, நாம் எப்படியாவது விக்கலை நிறுத்த வேண்டும் என்று பிரயத்தனம் செய்வதும், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் அதிகம்தான், சில நிமிடங்களே நீடிக்கும் விக்கல், நீங்குவதற்குள் நம்மை ஒரு பாடாய்படுத்திவிடும் .
எல்லாம் அவசரம் தான் காரணம். காலையில் அலுவலகத்துக்கோ அல்லது பள்ளி கல்லூரிகளுக்கோ செல்லத் தாமதாமாகிவிடும் என்று எண்ணி, அல்லது மதிய உணவு நேரத்தில் சாப்பிடும்போது, வரும் போன் அழைப்பை பேசிக்கொண்டே சாப்பிடுவது, அரட்டையடித்துக் கொண்டே சாப்பிடுவது, என்று ஏதோ சிந்தனையில் சாப்பிடுவது போன்ற சாப்பிடும் போது செய்யக்கூடாத அந்த செயல்கள் மூலம் விக்கல் வரும்.
காலை சிற்றுண்டியை நாம் அவசர அவசரமாக அள்ளி விழுங்கும் போதோ, அவரசமாக ஏதேனும் சூடான பானங்கள் பருகும் போதோ நமக்கு விக்கல் ஏற்படும். மேலும், நம்முடைய மூச்சுக்காற்று, மூச்சுக்குழாய்கள் வழியே உடலில் பரவும் பொழுது, உடலில் வயிற்றுக்கும், நெஞ்சுக்கும் இடையே உள்ள தசைகள் திடீரென தானாக சுருங்கி விரியும் . அத்தன்மையை அடையும் போது, அதன் காரணமாக விக்கல் ஏற்படும்.
தசைகள் தானாக சுருங்கி, நாம் அறியாத காரணங்கள் பல இருந்த போதிலும், பொதுவாக இடைவிடாத விக்கல் இருந்தால் மட்டும் தான், நாம் அதை ஆராயவேண்டும். மாறாக, விக்கல் சாதாரணமாக, சில நிமிடங்களில் நின்றுவிடும், அல்லது விக்கலை நிறுத்த எடுக்கும் முயற்சிகளின் விளைவால், விக்கல் நின்றுவிடும். நீண்ட நேரம் தொடரும் விக்கலால், களைப்பு மற்றும் உணவில், நாட்டமின்மை போன்ற விளைவுகள் ஏற்படும்.