தொடர்ந்து விக்கல் எடுக்கிறதா ? இதை செய்யுங்கள்:
துளசி :
துளசி இலைகள் சிறிது எடுத்து வாயில் பூட்டு மென்று வந்தால், விக்கல் தீர்ந்து விடும். துளசி இலைகள் கிடைக்கவில்லை என்றால், துளசி தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.
மூச்சடக்குதல் :
விக்கல் எடுக்கும் நேரத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, கொஞ்சம் நேரம் மூச்சுக் காற்றை உள்ளேயே வைத்திருந்து, பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம், விக்கலைப் போக்கலாம்.
சர்க்கரை :
பொதுவாக கிராமங்களில் விக்கல் வரும்போது செய்வார்கள், ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டால், விக்கல் நீங்கிவிடும். தயிரில் சற்று கூடுதலாக உப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பருகி வந்தால் விக்கல் நின்று விடும்.
சூடான அல்லது குளிரான நீராக அல்லாமல், சாதாரண தண்ணீரை தினமும் அடிக்கடி நிறைய பருக வேண்டும், குறைந்த பட்சம் எட்டு லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு நாம் பருக வேண்டும். அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உணவு உண்ணும்போது, மெதுவாக, உணவை நன்கு மென்று உண்ண வேண்டும், அளவுக்கு மீறி உண்ணாமல் அளவுடன் சாப்பிட வேண்டும்.
நன்கு செரிக்கக்கூடிய உணவு மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும். சூடான உணவு வகைகளை தவிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும், ஊட்டமுள்ள புரதச்சத்துகள் அதிகமுள்ள உணவு வகைகள் சாப்பிட வேண்டும்.