உக்ரைன் நாட்டில் உள்ள அஜோவ் உருக்காலையிலிருந்து 300க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டில், ரஷ்யா சுமார் 75 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் இருக்கும் அஜோவ் உருக்கு ஆலையில் பலர் மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்து 300க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிபரான ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.
அங்கு தாக்குதலில் காயம் ஏற்பட்டவர்களையும், மருத்துவர்களையும் மீட்பதற்காக இரண்டாம் கட்ட வெளியேற்றம் நடைபெற்றது. மேலும், மரியுபோல் நகர் மற்றும் அதற்கு அருகில் அமைந்திருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரையும் வெளியேற்றி விடுவோம் என்று அதிபர் கூறியிருக்கிறார்.