2 1/2 வயது ஆண் குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெல்லூரில் இருக்கும் செங்கல் சூளையில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 1/2 வயதில் சிவசக்தி என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிவசக்தி எதிர்பாராதவிதமாக எர்த் கம்பியை பிடித்ததால் குழந்தையை மின்சாரம் தாக்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோகிலா தனது குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்த போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சிவசக்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் கோகிலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.