சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ்-ற்கு 86 வயதாகிறது. இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, அவர் ஜெட்டா நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி மன்னருக்கு, இதற்கு முன்பே கடந்த 2020-ஆம் வருடத்தில் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடந்த மார்ச் மாதம் இதய பிரச்சனைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.