வீடு புகுந்து திருட முயன்ற நபர் பெண்ணின் அழகை பார்த்து ரசித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் 35 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்த பெண் காலையில் தனது வீட்டில் திடீரென ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஒருவர் தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் பொதுமக்கள் அந்த நபரை துரத்தி பிடித்தனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சூரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த நபருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதில் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் திருட வந்த நபரை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த திருடன் வாழப்பாடி நீர்முள்ளிகுட்டை பகுதியில் வசிக்கும் சின்னராசா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் மீது ஏற்கனவே 17 திருட்டு வழக்குகள் இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைதாகி சிறையில் இருந்து வெளியில் வந்த சின்னராசா தற்போது வீடு புகுந்து திருட முயன்று மாட்டிக் கொண்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அந்த பெண் கூறியதாவது, நான் தூங்கிக் கொண்டிருந்த போது எனது கன்னத்தில் யாரோ கைவைத்தபடி அருகில் உட்கார்ந்து இருந்த படி உணர்ந்தேன். இதனையடுத்து தூக்கத்தில் எழுந்து பார்த்த போது வீட்டிற்குள் புகுந்த நபர் என்னை பார்த்து ரசித்தபடி உட்கார்ந்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் ‘திருடன் திருடன்’ என கூச்சலிட்டதும் அங்கிருந்து அந்த நபர் வெளியே தப்பி ஓட முயன்றார். இதனையடுத்து அவரை பொதுமக்கள் பிடித்து விட்டனர் என அந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்னராசா வீடு புகுந்து திருட முயன்றாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.