ரிஷபம் ராசி அன்பர்கள்..!! இன்று குலதெய்வத்தை வழிபட்டு நன்மைகள் காண வேண்டிய நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் இருக்கும். பணி நிமிர்த்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமும் அதிகரிக்கும்.
பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். அதுமட்டுமில்லாமல் விளையாட்டுத் துறையிலும் வெற்றி பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் பச்சை நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்