HDFC ERGO என்ற ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் pay as you driveஎன்ற புதிய காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கார்கள் இருந்தும் அதனை அதிகம் பயன்படுத்தாதவர்கள் அதை இன்சூரன்ஸ் செய்ய தயங்குவார்கள். அப்படி கார்களை அதிகம் பயன்படுத்துவதால் அதனை இன்சூரன்ஸ் செய்ய தயங்கும் மக்களுக்காக மற்றும் பல கார்களை வைத்திருப்போர்களுக்காக இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கார்களை குறைவாக பயன்படுத்துபவர்கள் மற்றும் பல கார்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த இன்சூரன்ஸ் பாலிசி சிறந்தது.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மே 14-ஆம் தேதி வரை புதிய மாருதி சுசுகி கார் உரிமையாளர்களுக்கு இந்த புதிய திட்டம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் ரெகுலேட்ரி சாண்ட்பாக்சின் கீழ் பத்தாயிரம் பாலிசிகள் அல்லது 50 லட்சம் ரூபாய் பிரீமியத்தில் பொருந்தும். அதுமட்டுமல்லாமல் இது மாருதி சுசுகி இன்சுரன்ஸ் புரோக்கிங் பிரைவேட் லிமிடெட் மூலமாக பிரத்தியேகமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலமாக வாகனங்களை அதிகம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தை 20 சதவீதம் வரை குறைக்கலாம். இந்த இன்ஷூரன்ஸ் எடுக்க நினைக்கும் கார் உரிமையாளர்கள் தங்களது காரில் ஒரு வருட காலத்திற்குள் பயணிக்க எதிர்பார்க்கும் கிலோமீட்டர்களை தேர்வு செய்து கொள்ள முடியும். அதை தேர்வு செய்யும் ஆப்ஷன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.