அர்ஜெண்டினாவின் கார்டோபா என்ற இடத்தில் வளமான விவசாய பகுதியில் கிட்டார் வடிவில் காடு அமைத்துள்ளார் ஒருவர். 70000- க்கும் மேற்பட்ட சைப்ரஸ் மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் இந்த காடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காடு ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இது வானில் இருந்து பார்த்தால் பெரிய சைஸ் கிட்டார் போல காட்சியளிக்கும். அப்படிப்பட்ட இந்த காடு அமெரிக்காவில் இருக்கும் பாம்பஸ் என்ற பகுதியை சேர்ந்த விவசாயி பெட்ரோ மார்ட்டின் என்பவர் உடையது. இவர் தனது காதல் மனைவிக்காக இப்படி ஒரு காட்டை அமைத்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஒருநாள் தம்பதியினர் இருவரும் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு விவசாய நிலம் இவர்களை கவர்ந்துள்ளது. அதாவது அந்த நிலம் ஒரு பால் கறக்கும் தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து அசந்துபோன மார்ட்டின் மனைவி தனது நிலத்தையும் ஏதாவது வடிவத்தில் உருவாக்க வேண்டும் என்று நினைத்து கனவுடன் வாழ்ந்துள்ளார். அதன்படி தங்கள் பண்ணையை கிட்டார் வடிவத்தில் உருவாக்க வேண்டும் என்று நினைத்தார்.
இதை தனது கணவரிடமும் கூறியுள்ளார். ஆனால் அது கூறிய சில நாட்களில் உடல்நலக் குறைவு காரணமாக மார்ட்டின் மனைவி இறந்து விட்டார். அதன் பிறகு தனது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து, தனது குழந்தைகளின் உதவியுடன் சுமார் 7000 மரங்களைக் கொண்டு கிட்டார் வடிவிலான காடு ஒன்றை உருவாக்கியுள்ளார் மார்ட்டின். தனது மனைவி மேலிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருப்பார் என்ற எண்ணத்தில் இந்த காட்டை உருவாக்கி அதனை தினமும் அவர் பராமரித்து வருகிறார்.