இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை விண்ணிற்கு அனுப்ப ரஷ்யா மிக முக்கிய பங்காற்றியது. அதுமட்டுமல்லாமல் நட்பு ரீதியாக மற்ற நாடுகளைவிட இந்தியா மீது நல்ல நட்புறவு கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய ஆயுத விற்பனையாளராக ரஷ்யா உள்ளது. ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுதங்களை விலைக்கு கேட்டபோது அதனை தருவதற்கு ரஷ்யா மறுத்துவிட்டது.ஆனால் ரஷ்யாவின் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உலகிலேயே மிக அதிகமாக கொள்முதல் செய்வதை இந்தியா தான்.
இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவத்தின் ஆயுதங்களில் 85% ரஷ்ய ஆயுதங்களே. அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு சாதனங்கள் இறக்குமதியின் 60% ரஷ்யாவிலிருந்து செய்யப்படுகின்றது
. ரஷ்யாவிடமிருந்து இந்திய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை குத்தகைக்கு எடுத்துள்ளது. மேலும் இந்தியா தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கவும் ரஷ்யா உதவுகின்றது. மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை தர மறுக்கும் ரஷ்யா, இந்தியாவிற்கு எப்போதும் உதவி வருகிறது.