இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவந்திபுரம் ஆத்து மேட்டு பகுதியில் சிவசங்கரி(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சிவசங்கரிக்கு சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுந்தரம் சிவசங்கரியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிவசங்கரி கர்ப்பமானார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவசங்கரி கூறியதற்கு சுந்தரம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுந்தரம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கர்ப்பத்தை கலைக்க சுந்தரம் சிவசங்கரிக்கு சில மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிவசங்கரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.