பெங்களூரில் உள்ள Wakefit.co என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் மெத்தை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனம் ஊழியர்கள் வேலை நேரத்தில் தூங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஊழியர்கள் தமது வேலை நேரத்திற்கு இடையிடையே 30 நிமிடங்கள் குட்டி தூக்கம் போட்டு கொள்ளலாம். ஊழியர்கள் உறங்குவதற்கு உரிமை இருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலை செய்யும் ஊழியர்கள் அனைவருமே பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை தூங்கலாம். அதுவும் உடனடியாக இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு ஊழியர்கள் தினமும் வேலை நேரத்தில் இடையிடையே 30 நிமிடங்கள் தூங்குவதால் அவர்களின் செயல்திறன் 33 சதவீதம் அதிகரிப்பதாக நாசா நடத்திய ஆய்விலும், ஊழியர்கள் உறங்குவதால் உடல் சோர்வடைவது தடுக்கப்படும் என்றும் ஹார்டுவர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.