Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் ஷவர்மா சாப்பிட தடையா?…. உண்மை நிலவரம் என்ன…..விளக்கம் அளித்த அமைச்சர்….!!!!

அண்டை மாநிலமான  கேரளாவில்  உள்ள காசர்கோடு மாவட்டத்தில், சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும்  30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் அதிகாரிகள் வைத்தனர். இந்நிலையில் மாநிலம் முழுதும் அதிரடி சோதனைகளை நடத்தி, மாநிலம் முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளை மூட மாநில அரசுஅதிரடி  உத்தரவு போட்டது.

மேலும் இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி,  தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனையை நடத்த, உணவு பாதுகாப்புத் துறையினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர்கள்  சந்திப்பில் பேசியுள்ளதாவது, கேரள மாநிலத்தைப் போல் தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், தமிழகத்திலும் ஷவர்மா கடைகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது. எனவே இதுவரை 1000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறிவுரை வழங்கி, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இந்நிலையில் ஷவர்மா தயாரிப்பதற்கான உரிய வழிமுறைகளை முறையாக  பின்பற்றாவிடில் அதை சாப்பிடுபவர்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்துகிறது. ஆகவே மேலைநாட்டு உணவு வகையான ஷவர்மா அந்த நாட்டின் மக்களின் தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும் எனவும், நம் நாட்டு மக்கள் ஷவர்மா போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

 

Categories

Tech |