பிரபல நிறுவனம் வர்த்தக நோக்கிலான வானுர்திகளை மட்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வானுர்தி சேவை கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தை ஜலான் கல் ராக் கன்சோர்டியம் என்ற அமைப்பு ஏற்று நடத்துகிறது. இந்த அமைப்பு கடந்த வாரம் ஹைதராபாத்தில் விமான பயண பரிசோதனையை நடத்தியது. இந்த சோதனை விமானப் பயணத்திற்கான சான்றிதழ் பெறும் நோக்கத்தோடு நடைபெற்றது.
இந்த நிறுவனத்திற்கு மத்திய அமைச்சகம் கடந்த 6-ம் தேதி ஒரு கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில் பாதுகாப்பு அனுமதிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் மற்றொரு வானுர்தி பரிசோதனையையும் நடத்த வேண்டும். அதாவது டிஜிஏசி அதிகாரிகள், வானுர்தி நிறுவன அதிகாரிகளை பயணிகளாக ஏற்றி செல்ல வேண்டும். அதன்பிறகு வர்த்தக வானுர்தி ஒன்று மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.