மேஷம் ராசி அன்பர்களே…!!இன்று சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் பணிபுரியும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள் பற்றாக்குறை அகலும் அரசியல்வாதிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மாலை நேரத்தில் எதிர்பாராத நன்மை ஏற்படும் .இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்று உடலில் சூடு ஏற்படும் நன்மையை கொடுக்கும் .தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் நண்பருடன் அனுசரித்துச் செல்வது நல்லது வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்களை கொஞ்சம் தள்ளிப் போடுவீர்கள். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். சுவையான உணவு கிடைக்கும். மனோபலம் கூடும். மனோ தைரியம் அதிகரிக்கும்
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் இருக்காது சுமூகமான சூழல் இருக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான….
அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்டமான எண் : 6 மற்றும் 9
அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் காவி நிறம்
ரிஷபம் ராசி அன்பர்கள்..!! இன்று குலதெய்வத்தை வழிபட்டு நன்மைகள் காண வேண்டிய நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் இருக்கும். பணி நிமிர்த்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமும் அதிகரிக்கும்.
பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். அதுமட்டுமில்லாமல் விளையாட்டுத் துறையிலும் வெற்றி பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் பச்சை நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
மிதுனம் ராசி அன்பர்கள்…!! இன்று ஒளிமயமான வாழ்க்கைக்கு இறைவன் அருள் துணை புரியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். அடுத்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். பண கடன் கொஞ்சம் அடையும். பணவரவும் அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள்.
மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை விட்டு விட்டு மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலைப்பளு குறையும். தொழிலில் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். லாபம் பன்மடங்கு உயரும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இன்று உங்களுக்கு திருமண யோகமும் காதல் கைகூடும் நாளாகவும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
கடகம் ராசி அன்பர்கள்…!! இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்து சேரும். பாதியில் நின்ற வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். நெருக்கமானவர்களிடம் இனிமையாக பேசி பொழுதைக் கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றத்தை பெறும்.
வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு போட்டிகள் விலகிச்செல்லும், பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள், சக மாணவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்றைய நாள் எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாகவே செய்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
சிம்மம் ராசி அன்பர்கள், இன்று புதிய பொறுப்புகள் இல்லம் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள், இடமாற்றம் கொஞ்சம் திருப்திக் கொடுக்காமல் போகலாம், மற்றவரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். இன்று நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கையில் வந்து சேரும்.
நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டு. எல்லா வித வசதிகளையும் இன்று நீங்கள் அனுபவிக்கக்கூடும் . தேடி போனதும் தானாகவே வந்து சேரும், அறிவு திறன் அதிகரிக்கும், ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானம் வந்து சேரும்.
பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்து வந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். இன்றைய நாள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இன்று மாணவ செல்வங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் , ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், சக மாணவர்களின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீலம்
கன்னி ராசி அன்பர்கள், இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும், தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும், கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பண தேவைகள் பூர்த்தி ஆகும். இன்று மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றத்தை அடைய உதவும். அடுத்தவர் ஆச்சர்யப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.
தடை பட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்திய பேச்சால் ஆதாயம் இருக்கும், பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவார்கள், இருந்தாலும், புதிய நபர் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருங்கள்.
இன்று நீங்கள் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும், பயணத்தின் பொழுது பொருட்கள் மீது கவனமாக இருங்கள், இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி, நல்ல முன்னேற்றமான சூழ்நிலை கொடுக்கும்.மேற் கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை
துலாம் ராசி அன்பர்கள், இன்று இஷ்ட தெய்வ வழிபாட்டால் பெருமை காணவேண்டிய நாளாக இருக்கும், திடீர் பயணத்தால் தித்திப்பான செய்திகள் வந்து சேரும், மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள், உறவினர்கள் வருகை இருக்கும்.
வீடு, மனை, வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள், அலைச்சல் கொஞ்சம் குறையும், என்றோ செய்த ஒரு வேளைக்கு இப்பொழுது பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.
நிலம், வீடு மூலம் நல்ல லாபம் இன்று ஏற்படும், இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை, சுமுகமான சூழல் காணப்படும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், இருந்தாலும் படித்த படத்தை ஒரு முறைக்கு, இருமுறை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் இன்று சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீலம்
விருச்சிக ராசி அன்பர்கள், இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வில் வெளிவரக்கூடிய சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். இடம், பூமி வாங்கும் எண்ணம் வெற்றியை கொடுக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவதை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். எதிலும் ஆதாயம் கிடைக்கும், பேச்சு திறமை அதிகரிக்கும், எதிர் பாலினத்தவரிடம் பழகும் போதும் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும், வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டியிருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து வந்து சேரும். மேல் அதிகாரிகளின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகி செல்லும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் சிரமம் இருக்கும், அதாவது பாடத்தை கொஞ்சம் கடுமையாக படியுங்கள், படித்ததை பாடத்தை எழுதிப் பாருங்கள், பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். வழக்குகள் சாதகமாகும். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிக்கு வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை சாதகமாகவே இருக்கும். இன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை கொடுக்கும். இன்று எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவணிப்பீர்கள். புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். பயணங்களின்போது கவனமாக இருங்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல வெற்றி வாய்ப்புகள் இருக்கும். மேற் கல்விக்கான முயற்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் இன்று முழுமையாகவே கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்கள்…!! இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து தான் செய்ய வேண்டும். தொழில் பணியாளரிடம் கூடுதல் கவனம் இருக்கட்டும். பயணங்களில் சில மாற்றங்களை இன்று நீங்கள் செய்யக்கூடும். திடீர் கோபங்கள் கொஞ்சம் தலைதூக்கும். நிதானமாக இருப்பது நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையுமே சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
வியாபாரிகள் எந்த கொள்முதலையம் தயக்கமின்றி செய்யலாம். உங்களை ஒதுக்கி வைத்தவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். இன்று எதிரிகள் விலகிச்செல்வார்கள். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணத்தின் போது உங்களுக்கு புதிய நபர்களும் புதிய அனுபவமும் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக எழுந்து நின்று ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியில் நீங்கள் ஈடுபடும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் ராசி அன்பர்கள்…!! இன்று சிவபெருமானை வழிபட்டு சிறப்புகளைக் காண வேண்டிய நாளாக இருக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். இன்று பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவுக்கு வரக்கூடும். உங்களுடைய சாமர்த்தியமான செயல்களால் மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்களின் நட்பு கிடைக்கும், கௌரவம் இன்று கூடும். செய்தொழிலில் நல்ல லாபமும் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்.
புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பல மடங்கு லாபத்தை இன்று ஈட்டுவீர்கள் அதனால் நன்மையும் ஏற்படும். மஹான்களின் சந்திப்பு கிடைக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். தன் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் இல்லம் தேடி வரும். இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாக இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்த ஒரு சிரமமும் இல்லை, சிரமமின்றி பாடங்களை சிறப்பாக படிப்பார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மட்டும் இல்ல நீலநிறம்
மீனம் ராசி அன்பர்கள்…!! இன்று சந்தோச வாய்ப்புகளை சந்திக்கும் நாளாக இருக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இடம் பூமியால் லாபம் உண்டாகும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும், திறமை வெளிப்படும், ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோரும் ஆதரவாக இருப்பார்கள். இன்று துன்பமும் தொல்லையும் நீங்கும், மனோ தைரியம் கூடும்.
உத்யோகஸ்தர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும். பெரியோர்களின் பரிபூரணமான ஆலோசனைகளையும் ஆசிகளையும் இன்று பெறுவீர்கள். இன்று தெய்வீக நம்பிக்கை கூடும். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே நீடித்த அன்பு இருக்கும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்