இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்கு பெறுவதற்கான விண்ணப்பம் இன்றுடன் முடிவடைகிறது.
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ வெளியிடப்பட்டது. இதில் 67 பங்குகள் வெளியான முதல் நாளே விற்று தீர்ந்தன. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பங்கு சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அதேசமயத்தில் எல்ஐசி ஐபிஓ வெளியாகி அதிக வரவேற்பையும் பெற்றது. அதிலும் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கென தனி ஒதுக்கீடுகளையும் பல தள்ளுபடிகளையும் எல்ஐசி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியை பெறும் பாலிசிதாரர்கள் பின்வரும் தகுதிகளை பெற்றிருந்தால் ஐபிஓ-வை வாங்கலாம்.
மேலும் எல்ஐசி ஐபிஓ சந்தாவை எல்ஐசி பாலிசிதாரர்களுக்கான முன்பதிவு ஒதுக்கீடு 1.99 மடங்கு சந்தாவாகச் செலுத்தப்பட்டது. இதில் ஊழியர்களின் பங்கு 117 சதவீதம். மேலும், பணியாளர்கள் மற்றும் சிலரை முதலீட்டாளர்களுக்கு தல ரூபாய் 45 தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு ரூபாய் 60 தள்ளுபடியும் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள்:
IPO விக்கு விண்ணப்பிக்க முதலில் அனைத்து பாலிசிதாரர்களும் டிமேட் கணக்கை உருவாக்க வேண்டும். நிறுவனத்தின் ஒழுங்குமுறைத் தாக்கல் படி, பிப்ரவரி 28, 2022 இன் இன்சூரன்ஸ் பாலிசியுடன் பான் இணைக்கப்பட்டுள்ள எல்ஐசி பாலிசிதாரர்கள் எல்ஐசி ஐபிஓவில் தள்ளுபடிக்காகப் பதிவு செய்ய முடியும். மேலும் எல்ஐசியின் பங்கு பெறுவதற்கான விண்ணப்பம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 4ஆம் தேதியில் இருந்து சிலரை முதலீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறபட்டு வருகின்றது. இதில் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 வரை இருக்கும் என்றும், இதிலிருந்து பாலிசிதாரர்களுக்கு பணியாளர்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பாலிசிதாரர் ஒதுக்கீட்டின் கீழ், முதிர்வு, சரணடைதல் அல்லது பாலிசிதாரரின் இறப்பு காரணமாக எல்ஐசி பதிவுகளிலிருந்து வெளியேறாத பாலிசிதாரர்களும் 60% தள்ளுபடிக்குத் தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.