நாம் எத்தனை வருடம் கழித்து போனாலும் நமது வருகைக்காக காத்திருந்து கண்களில் கண்ணீருடனும், வாயில் சிரிப்புடனும் நம்மை வரவேற்பது தாத்தா, பாட்டி தான். தனது தாத்தாவை காப்பாற்றுவதற்காக ஒரு சிறுவன் தனது உயிரையே தியாகம் செய்துள்ளான் என்பதை நம்ப முடிகிறதா…? நியூயார்க்கை சேர்ந்த Tylor Doohan என்ற சிறுவன் நடக்க முடியாத தனது தாத்தா மீது அதிகமான பாசம் வைத்துள்ளான். இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் போல பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுவன் தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவன் வீட்டில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 6 பேரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளான். மீண்டும் தனது தாத்தாவை காப்பாற்றுவதற்காக சிறுவன் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தான்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் தனது மகனை உள்ளே போகவிடாமல் தடுத்துள்ளார். அதனையும் மீறி சிறுவன் தனது தாத்தாவை காப்பாற்றுவதற்காக தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் சென்றுள்ளான். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சிறுவன் தனது தாத்தாவை காப்பாற்றுவதற்காக அவரை தனது கைகளில் தூக்கியுள்ளார். அதற்குள் தீ வேகமாக பரவி இரண்டு பேரும் உடல் கருகிய நிலையில் இருந்துள்ளனர். இதனை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.