தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும்டீசல் விலை உயர்வை தொடர்ந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வை பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் காய்கறிகளின் விலையை அடுத்து தற்போது கோழி கறி மற்றும் முட்டை விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகளிருந்து 5 காசு உயர்ந்து 3 ரூபாய் 65 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விற்பனை விலை ரூ.3.90 ஆகவும்,நாமக்கல்லில் ஒரு கிலோ கறி கோழி உயிருடன் இரண்டு ரூபாய் உயர்ந்து 122 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை தேவை அதிகரிப்பால் இந்த விலை உயர்ந்துள்ளது.