Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லாரும் பயப்படுறாங்க” பயில்வானை தூக்குங்க சார்…. பரபரப்பு புகார்….!!!!

யாரு சாமி அவன் என்று கதறும் நிலையை திரையுலகிற்கு பயில்வான் ரங்கநாதன் ஏற்படுத்தியுள்ளார். யூடியூப் சேனலில் இவரின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் உள்ளது. இதை யூடியூப் சேனல்களும் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் கே. ராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல்களில் கதாநாயகிகள், கதாநாயகர்கள் பற்றி தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை கூறி பணம் சம்பாதிப்பதை தொழிலாக செய்கிறார்.
மேலும் தன்னை யாராவது தட்டிக் கேட்டால் நான் தூத்துக்குடிகாரன் அரிவாளால் கழுத்தை அறுத்துவிடுவேன் என மிரட்டுகிறார். இந்த மிரட்டல் காரணமாக இவர் மீது புகார் கொடுக்க கதாநாயகன், கதாநாயகிகள் அஞ்சுகின்றனர். ஆகவே பயில்வான் ரங்கநாதனை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்றார்.

 

Categories

Tech |