கணவரின் நினைவு நாளில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொமராபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கௌதம்(32) என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் பழனிசாமி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் சாந்தி நேற்று முன்தினம் எனக்கு சாப்பாடு வாங்கி விட்டு வா என கூறி மகனை வெளியே அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்த கௌதம் தனது தாய் வாந்தி எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது ஏன் வாந்தி எடுக்கிறீர்கள் என கௌதம் கேட்டுள்ளார். அதற்கு இன்று உனது தந்தையின் இறந்த நாள் அவரது பிரிவை தாங்க முடியாமல் நான் விஷம் குடித்துவிட்டேன் என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது தாயை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சாந்தியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.