Categories
உலகசெய்திகள்

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தில்…. பிரபல நாட்டின் யூடியூப் ஆர்வலர் கைது…. காரணம் என்ன…?

யூடியூப் ஆர்வலர் பெஞ்சமின் ரீச் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விண்வெளி மையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் ரீச். இவர் யூடியூபில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கஜகஸ்தானில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன வெளி மையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்து இருக்கிறது.

இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த கியூபா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இது பற்றி ரஷ்ய விண்வெளி அமைப்பு ரோஸ்காஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி பேசும்போது, “இவர்கள் இருவரும் கஜகஸ்தான் தலைநகர் நூல் சுல்தானுக்கு தென்மேற்காக 1,100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பைகானுரில் உள்ள உள் விவகார துறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றனர் என கூறியுள்ளார். பெஞ்சமின் ரிச்சின் இன் யூடியூப் சேனலை 35 லட்சம் பேர்  பார்த்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |