Categories
உலக செய்திகள்

ஆப்கான் பெண்களுக்கு தலிபான் அரசு போட்ட புது ரூல்ஸ்…. கவலை தெரிவித்த ஐ.நா….!!!!!

ஆப்கானிஸ்தானில் தாலீபான் அரசு ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உலகநாடுகள் பலவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும் இவற்றிற்கு செவி சாய்க்காத தலீபான் அரசு, இப்போது இஸ்லாம் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று குறிப்பிட்டு புதிய உத்தரவை அறிவித்து இருக்கிறது.

அதனடிப்படையில் பெண்கள் உச்சிமுதல் பாதம் வரையிலும் முழுவதுமாக மறைத்தவாறு பர்தா அணியவேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு தலீபான்களின் இந்த உத்தரவுக்கு ஐக்கியநாடுகள் அவை கவலை தெரிவித்து உள்ளது.

ஐநா சபையின் பொதுச் செயலாளர் இது குறித்து கூறியதாவது “அவசியப்பட்டால் மட்டுமே பெண்கள் பொதுயிடங்களுக்கு வர வேண்டும். அவ்வாறு வரும்போது தலை முதல் கால்வரை முழுமையாக மறைத்தவாறு பர்தா அணியவேண்டும் எனும் தலீபான்களின் உத்தரவு  கவலையளிக்கிறது. ஆகவே தலீபான்கள் தாங்கள் அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார்.

Categories

Tech |