தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாயை புகழ்ந்து பெரிய கவிதையை பதிவிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், இந்த கவிதை சாரா என்பவர் எழுதியது.
இதுபோல அடுத்தவர் கவிதையை தனது போன்று பதிவிடுவது சரியா? என கமெண்ட் செய்து வந்தனர். இவரின் இந்த பதிவை பார்த்த சாரா கோபமடைந்து தனது ஸ்டோரியில் ‘மை டியர் மம்’ என்கிற கவிதையை காஜல் அகர்வால் தன்னுடைய கவிதை போல பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CdR3kILhcGA/
அந்த கவிதை என்னுடையது. அதற்கான கிரெடிட் தனக்கு தருமாறு யாராவது சொன்னால் நன்றாக இருக்கும் என கூறினார். இதனையடுத்து, காஜல் அகர்வால் அந்தக் கவிதைக்கு சாராவுக்கு கிரெடிட் கொடுத்தார். இதைப்பார்த்த சாரா காஜல் அகர்வாலுக்கு நன்றி தெரிவித்தார்.