தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றது. அப்போது கேள்வி மற்றும் பதில் நேரத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்தலாம் என்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் நிலவும் குளறுபடிகளை களைந்து இனிவரும் ஆண்டுகளில் கலந்தாய்வை நல்ல முறையில் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் பொறியியல் கலந்தாய்வில் மாற்றம் ஏற்படும் என தெரிகிறது.
Categories