சந்தையில் 35 கிலோ எடையுள்ள மருத்துவ குணம் கொண்ட பால் சுறா மீன் விற்பனைக்கு வந்துள்ளது..
ஈரோடு மாவட்டத்தில் ரெயில் நிலையம் அருகில் ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் பகுதிகளில் மீன் சந்தை செயல்பட்டு வருகின்றன. சென்னிமலை சாலை, பெருந்துறை சாலை, சம்பத்நகர் உட்பட பல இடங்களில் மீன் விற்பனை கடைகள் வார தினங்களில் செயல்பட்டு வருகின்றது. தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களிலிருந்து இந்த கடைகளுக்கு மீன் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
அதில் வரும் சில மீன்கள் வித்தியாசமானதாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருக்கும். அந்த மீன்களை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும்போது பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வாங்குகின்றனர். அதன்படி நேற்று ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் சந்தைக்கு 35 கிலோ எடையுள்ள ஒரு பால் சுறா மீன் விற்பனைக்கு வந்துள்ளது. இதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தார்கள் அதன்பின் அந்த பால் சுறா மீன் மருத்துவ குணம் கொண்டது என்பதால் பலரும் போட்டி போட்டு வாங்கி சென்றார்கள். இதைப்போன்று கிளி மூக்கு மீன், மயில் மீன் போன்றவை நேற்று விற்பனைக்கு வந்துள்ளது.