ஆன்லைனில் ஆர்டர் செய்ததில் ஷாம்புக்கு பதிலாக அழுகிய உருளைக்கிழங்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், நசியனூர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் ஆசிரியர் காலனியில் நீதி ஆலோசனை மையம் நடத்தி வருகின்றார். இவர் சில தினங்களுக்கு முன் ஆன்லைனில் ஷாம்பு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன்பின் அவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஒரு பார்சல் வந்தது. அப்போது ஷாம்புக்கான தொகை ரூபாய் 330 கொடுத்துவிட்டு பார்சலை அந்த பெண் வாங்கினார்.
அதன்பின் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில், ஷாம்புக்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் அழுகிய உருளைக்கிழங்கு ஒன்று இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்திற்கு புகார் கொடுத்துள்ளார். ஆனால் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுகுறித்து ஆன்லைன் மூலம் பொருள் வாங்குவதற்கே பெரும் அதிர்ச்சியாக உள்ளது.