மதுரை அருகே பள்ளிக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி கிராமசபை கூட்டத்தில் துணிச்சலாக கேட்ட ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குடியரசு தினத்தை முன்னிட்டு மீனாட்சிபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது, இதனை பார்ப்பதற்கு சஹானா என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி தனது தோழிகளுடன் சென்று இருந்தார்.
அப்போது திடீரென ஊராட்சி மன்ற தலைவரை நோக்கி ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைவதாக அந்த மாணவி கூறியுள்ளார்.
உடனே பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறும் அவர் வலியுறுத்தினார், மாணவியின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.
ஐந்தாம் வகுப்பு மாணவியின் இத்தகைய துணிச்சலான பேச்சை அனைவரும் பாராட்டினர். மாணவி பேசிய வீடியோ இணையதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது..