Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 442 பேர் பாலியல் பலாத்காரம்…. அரசு பகீர் செய்தி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள தகவலின் படி,தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாலியல் தொந்தரவு வழக்குகளில் 2019ஆம் ஆண்டு 370 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டு 404 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க 442 வழக்குகள் ஆக பதிவாகியுள்ளது.

இதில் வரதட்சணை வழக்குகளும் உள்ளன. வரதட்சணை மரணம் 27, கணவர் மற்றும் உறவினர்கள் கொடுமை 875, மானபங்கம் 1077 வழக்குகள் என பெண்களுக்கு எதிராக 4,449 வழக்குகள் மொத்தம் பதிவாகியுள்ளது. 2011ஆம் ஆண்டே இணையத்தள உற்ற புகாரின் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு 13,077 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஏழு மடங்கு வழக்குகள் அதிகரித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |