ரத்த உறவு முறை திருமணங்கள் செய்வதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
ரத்த உறவு முறை கொண்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் பொழுது பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதாவது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடு, ரத்தசோகை அல்லது மரபணு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென்மாநிலங்களில் இரத்த உறவுத் திருமணங்கள் தான் அதிகளவில் நடந்து வருகின்றது. இதில் தமிழகம் முதல் இடம் பிடிக்கின்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் கர்நாடகா உள்ளது.
கர்நாடகத்தில் 27 சதவீதம் மக்கள் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதாக தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்நாடகத்தில் 9.6 சதவீதம் பெண்கள் தந்தைவழி ரத்த உறவிலும், 13.9 சதவீத பெண்கள் தாய்வழி இரத்த உறவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதை தடுக்க ரத்த உறவு திருமண முறைகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். இருப்பினும் இரத்த உறவுத் திருமணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது இங்கு 28% இரத்த உறவுத் திருமணங்கள் நடைபெறுகின்றது. ஆந்திராவில் 26%, புதுச்சேரியில் 19%, தெலுங்கானாவில் 18% இரத்த உறவுத் திருமணங்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன.