Categories
தேசிய செய்திகள்

ராணுவத்திற்கு செல்லும் மகன்…. கண் கலங்கி நிற்கும் தாயார்…. மனதை உருக்கும் புகைப்படம்….!!!!

மற்ற உறவுகளை காட்டிலும் அன்னையின் அன்பே எப்போதும் சிறந்தது. இதனை பல்வேறு தருணங்களில் பலர் உணர்ந்திருக்கலாம். அது பற்றிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராணுவத்தில் பணியாற்ற கூடிய தனது மகன் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்கிறார். அவரை வழி அனுப்பி வைப்பதற்கு அவரின் தாயார் வாசல் வரை வந்து நிற்கிறார்.

பின்னர் வீரர் வெளியே சென்றதும் கதவை சாத்திவிட்டு கண் கலங்குகிறார். தனது தாய்நாட்டின் நலனிற்காக செல்லும் தனது மகனை இராணுவத்திற்கு வழியனுப்பி வைத்துவிட்டு கலங்கும் தாயாரின் உயரிய தியாகம் பற்றி அந்த புகைப்படம் ஒன்றே ஆயிரம் வார்த்தைகளை சொல்கின்றது. அந்தப் புகைப்படத்திற்கு உணர்ச்சிகரமான தலைப்பு ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. அதில், 3 தசாப்தங்களுக்கு முன்னர் தனது தாயாரை இழந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ராணுவ வீரரின் தாயார் இடத்திலும் தனது தாயாரை பார்க்கிறேன் என்றும் அன்னை இந்தியாவில் அவரை பார்க்கிறேன் என்றும் தாயாருக்கு எனது வணக்கங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். தியாகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த புகைப்படம் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |