கடந்த 1991-ம் ஆண்டு பிரபல பெப்சி நிறுவனம் தங்களுடைய கம்பெனி புரமோஷனுக்காக ஒரு விளம்பரம் செய்தது. அதாவது பெப்சி பாட்டில்களின் மூடிகளில் 1 முதல் 994 வரையிலான நம்பர்களை 10 லட்சம் பாட்டில்களில் அச்சடித்து விற்பனை செய்துள்ளனர். அதன்பிறகு பெப்சி நிறுவனம் செய்தித்தாளில் பெப்சி பாட்டில்களில் இருக்கும் நம்பரில் நிறுவனம் குறிப்பிடும் நம்பர் இருந்தால் உங்களுக்கு 30 ரூபாய் வரை முதல் 30 லட்சம் வரையிலான பணம் கிடைக்கும் என்று வெளியிட்டனர்.
அதன்பிறகு பெப்சி நிறுவனம் அறிவித்தது போல மீண்டும் செய்தித் தாளில் 1991-ம் ஆண்டு மே 25-ம் தேதி 349 என்ற நம்பரை வைத்திருப்பவர்களுக்கு பரிசு கிடைக்கும் என வெளியிடப்பட்டது. ஆனால் நிறுவனத்தின் கவனக்குறைவால் 8 லட்சம் பாட்டில்களின் மூடிகளில் 349 என்ற நம்பர் அச்சிடப்பட்டிருந்தது. இதனால் பெப்சி நிறுவனம் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்கள் அறிவித்தது போன்றே 349 என்ற நம்பரை வைத்து இருந்த அனைவருக்கும் பணம் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக பெப்சி நிறுவனத்திற்கு 8.9 மில்லியன் டாலர்ஸ் நஷ்டமாகியுள்ளது.