அமெரிக்க பல்கலைக்கழக குளத்தில் 21 வயதான இந்திய வம்சாவளி மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன் ரோஸ் ஜெர்ரி என்ற 21 வயதான பெண் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்நிலையில் ஜெர்ரி பல்கலைக்கழக குளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இவர் தற்செயலாக குளத்தில் விழுந்திருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜெர்ரியை காணவில்லை என பல இடங்களில் தேடி பார்த்தபின், புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்படி போலீசார் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சுற்றி தேடிய போது ஜெர்ரியின் உடல் குளத்தில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளது.
ஆனால் மீட்கப்பட்ட ஜெர்ரியின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. அதனால் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என்றே போலீசார் கருதுகின்றனர். ஜெர்ரி பியானோ வாசிப்பதில் கில்லாடியான விளங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் மிகவும் புத்திசாலியான மாணவி என்றும் நல்ல பெயரெடுத்தவர். இப்படி இருக்கும் நிலையில் அவரது மரணம் சக மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி சோகத்தில் மூழ்கவைத்துள்ளது.