Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்”…. தொடங்கி வைத்து ஆட்சியர் பேச்சு…!!!!

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார்.

திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, சென்ற 3ஆம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் அதிகம் நடைபெற இருப்பதாக தகவல் பரவிய நிலையில் பல துறை அதிகாரிகளைக் கொண்டு குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு பனியன், நூற்பாலை நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றார்கள். அவர்கள் வசிக்கும் இடங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் கல்வி இடைநிலை தடுக்கவும் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்ப்பதற்காகவும் பல்வேறு துறை அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு விழிப்புணர்வு முகாமானது வரும் எட்டு வாரங்களுக்கு 15 இடங்களில் நடைபெற இருக்கின்றது.

அதன்படி முதல் வாரம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இம்முகாமில் பல்வேறு துறைகளில் இருக்கும் அதிகாரிகள் பங்கேற்று விழிப்புணர்வை வழங்கினார்கள். மேலும் பெண்கள் இலவச உதவி எண், குழந்தைகளுக்கான இலவச உதவி எண் , முதியவர்களுக்கான இலவச உதவி எண் உள்ளிட்டவற்றிற்கான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |