Categories
தேசிய செய்திகள்

ஓய்வுபெற்ற மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு குட் நியூஸ்….வெளியான சூப்பர் திட்டம்….!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலின் பேரில்,  ஓய்வுபெற்ற மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவினருக்கு, தனியார் பாதுகாப்பு முகமைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில், நலன் மற்றும் மறுவாழ்வு வாரியத்தின் வாயிலாக ‘மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு புனர்வாழ்வு‘ அளிப்பதற்கான திட்டம் ஒன்றை உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மறு வேலைவாய்ப்பு கோரும் ஓய்வுபெற்ற காவலர்கள், தங்களது சுய விவரங்களை, தங்களுக்கு அனுபவமுள்ள பிரிவு மற்றும் பணிபுரிய விரும்பும் இடம் போன்ற விவரங்களுடன் சேர்த்து, CAPF Punarvaas என்ற  இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, தகுந்த வேலைவாய்ப்பினைப் பெறலாம். இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், தனியார் பாதுகாப்பு முகமைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், தனியார் பாதுகாப்பு முகமைகளை பதிவு செய்யவும் ஒரு இணையதளத்தை செயல்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு இணையதளங்களும் தற்போது ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், CAPF Punarvaas என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் மத்திய ஆயுதக் காவல் படையினரின் தரவுகளை, தனியார் பாதுகாப்பு முகமைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் வாயிலாக, தனியார் பாதுகாப்பு முகமைகளை அறிந்துகொள்ளலாம்.

ஆகவே ஒரே அமைப்பின் வாயிலாக வேலை தேடுவோர் மற்றும் வேலை வழங்குவோர் ஆகியோரும் இதன் மூலம் பயனடையலாம். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த புதிய முன்முயற்சி, CAPF Punarvaas -ன்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற காவலர்களின் தரவுகளை, தனியார் பாதுகாப்பு முகமைகள் டிஜிட்டல் முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதையடுத்து மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் நலனைப் பாதுகாப்பதை, தனது முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |