நயனும் விக்கியும் திருமணம் செய்து கொள்ளும் இடம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தின் ரிலீஸ் அன்று விக்கியும் நயனும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி விக்கியும் நயனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில் சென்ற சனிக்கிழமையும் திருப்பதி கோவிலுக்கு சென்று நயனும் விக்கியும் திருமணத்திற்கான முன்பதிவு ஏற்பாடுகளை செய்ததாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் இருக்கும் ரிங் ரோட்டில் உள்ள மடம் ஒன்றில் இருவருடைய திருமணமும் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் இருவரும் இம்மடத்தை தங்களின் திருமணத்திற்காக முன் பதிவு செய்திருப்பதாக செய்தி பரவி வருகின்றது.