பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மாகாணத்தில் சாக்ரோ என்ற நகரிலுள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 4 பேர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிலையை சேதப்படுத்திய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே சிந்து மாகாண மக்கள் அவர்களை உடனே பிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் மத ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், எனவே அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் சற்று அமைதி காக்க வேண்டும் என சிந்து மாகாண அரசு அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.