கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷாமின் மற்றும் தாபிக் இருவரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா, என்பது குறித்தும், இவர்களது சதித்திட்டம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவில் காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவருடனும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் சிவகுமார் மற்றும் கேரள மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அனீஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.