இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் . இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகமாக செய்திகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் அநாகரிகமாக நடக்கும் மாணவர்களை நிரந்தரமாக பள்ளியைவிட்டு நீக்கினால் எதற்காக அவர்களை பள்ளியைவிட்டு நீக்கபட்டார்கள் என்பது குறித்த டிசியில் எழுதிக் கொடுப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் நடந்த விவாதத்தில், ஜி.கே மணி மாணவர்கள் பள்ளியில் பாய் போட்டு படுத்தனர். ஆசிரியரை தாக்கினர் என்று செய்திகள் வெளிவருகிறது.
பள்ளிக்கு அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி தொடங்கும் போது மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு மனநிலை பற்றிய பாடம் நடத்தப்படும். போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகே பாடங்கள் நடத்தப்படும். மாணவர்களை அரசு, பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் திருத்த வேண்டும். மாணவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டால் தற்காலிகமாக நீக்குவோம். நிரந்தரமாக நீக்கினால் எதற்காக நீக்கப்பட்டார் என்பது குறித்து டிசியில் எழுதி தருவோம் என்று தெரிவித்துள்ளார்.