கிழிந்த ரூபாய் நோட்டுகளை நம்மிடம் இருக்கும்பட்சத்தில் அதை எப்படி மாற்றுவது? என்பது நமக்கு தெரியாது . அப்படி நம்மிடம் இருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம்.
அதே போல அல்லது ரூபாய் நோட்டின் ஓரம் கிழிந்திருந்தாலோ, டேப் போட்டிருந்தாலோ அல்லது இரண்டு இடத்தில் கிழிந்து இருந்தாலோ அதை mutilated note என்று அதை வங்கியில் கொண்டு கொடுத்தால் அவர்கள் அதற்கான பணத்தை கொடுத்து விடுவார்கள். அவர்கள் அந்த பணத்தை செஸ்ட் வங்கியில் கொடுத்து மாற்றி விடுவார்கள். ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது அதில் இருக்கும் நம்பர் மிக முக்கியம். அதாவது இடதுபுற ஓரத்திலும், வலதுபுறத்தின் ஓரத்திலும் இருக்கும் நம்பர் ஏதாவது ஒரு நம்பர் இல்லை என்றாலும் கூட காசை மாற்ற முடியாது. அதே போல் மிக முக்கியமாக நம்மால் அந்த நோட்டு டேமேஜ் ஆகியிருந்தால் அதாவது மை கொட்டியிருந்தாலோ அல்லது கத்தரிக்கோல் வைத்து வெட்டியிருந்தாலோ பணத்தை மாற்ற முடியாதது. இதற்கெல்லாம் சென்னையிலுள்ள ஆர்பி அலுவலகத்தில் தனி கவுண்டர் இருக்கும் அங்கு சென்று கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
அதேபோல நாம் எந்த நிலைமையில் ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறோம் என்ற பட்சத்தில் தான் நமக்கு பணம் கொடுப்பார்கள். ரூபாய் நோட்டு 50 சதவீதம் நல்ல நிலைமையில் இருக்கிறது என்றால் முழு பணத்தை கொடுத்து விடுவார்கள். அதேபோல 2000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டுகளில் கிழிந்தது போக மீதம் 80 சதவீதம் நம்முடைய கையில் ரூபாய் நோட்டு இருந்தால் தான் முழு பணம் நமக்கு கிடைக்கும். 40 முதல் 50 சதவீதம் தான் நம்மிடம் ரூபாய் நோட்டு இருந்தால் அதற்கு பாதி பணம் தான் கிடைக்கும்.