Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“விதவை பெண்களுக்கு மாதம் மாதம் பென்சன்”…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….. தெரிஞ்சுக்கோங்க….!!!!! 

விதவைப் பெண்களுக்கு ரூபாய் 2000 மேல் பென்ஷன் வாங்கும் சூப்பரான திட்டத்தை இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

மத்திய அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் ஒரு முக்கியமான திட்டம் வித்வா பென்ஷன் யோஜனா திட்டம்.  மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும் இதற்கான பென்சன் தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. 18 முதல் 60 வயது வரை உள்ள விதவைப் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். கணவனை இழந்து பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில தகுதிகள் மற்றும் இருக்கவேண்டும்.

முதலாவது இந்த திட்டம் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களுக்கு மட்டும் பொருந்தும். வேறு எந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழும் பயன் பெற்றிருக்க கூடாது. விண்ணப்பிக்கும் பெண்களின் வயது வரம்பு 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது ஆதார் அட்டை, இறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு பாஸ்புக், வருமான சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் மூலமாக விதவைப் பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டு வந்தாலும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அதேபோல் ஹரியானா மாநிலத்தில் விதவைப் பெண்களுக்கு ரூபாய் 2250 பென்ஷன் வழங்கப்படுகின்றது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் 300 பென்சன் வழங்கப்படுகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 900 ரூபாயும், டெல்லியில் 2500, ராஜஸ்தான் மாநிலத்தில் 700, குஜராத்தில் 1700 ம் பென்ஷன் வழங்கப்பட்டு வருகின்றது. ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |