Categories
மாநில செய்திகள்

புதிதாக பரவிவரும் வைரஸ்….. “தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு”?…. சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்….!!!

தமிழகத்தில் தற்போது பரவிவரும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு வீணானது. ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் பள்ளியில் சென்று படிப்பது போல் இல்லை என்று அனைவருமே தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து மக்கள் அனைவரும் தங்களின் இயல்பு வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கட்டாய பொது தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதுபோல் தற்போது பொது தேர்வு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் தக்காளி வைரஸ் என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு ஒரு சில தகவலை தெரிவித்தார். கேரளாவில் பரவியுள்ள தக்காளி வைரஸ் பற்றி அம்மாநில அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். ஆனால் தமிழகத்தில் இந்த வைரஸ் இன்னும் வரவில்லை. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் மட்டும் 58 ஆக இருந்து தொற்று பாதிப்பு நேற்று 89 ஆக உயர்ந்தது. இதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |