Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து இரண்டு கொலைகள் – மக்கள் அதிர்ச்சி

திருச்சியில் ஒரே நாளில் இரண்டு கொலைகள் அடுத்தடுத்து நடந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சியில்  பாரதிய ஜனதா பிரமுகர் விஜயரகு நேற்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் நேற்று இரவு திருச்சி மரக்கடை அருகே மாநகராட்சி கழிவறையில் இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்தஇளைஞர் தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக பாலக்கரை குடிசை மாற்று வாரியத்தில் குடியிருக்கும் நாகூர், ஜம்பர், நசிம் ஆகிய மூவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் அடுத்தடுத்து நிகழும் இந்த கொலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |