திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் நடத்தப்படாமல் இருந்த பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் இந்த வருடம் வெகு சிறப்பாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளான இன்று பெருமாள் திருமண மண்டபத்திற்கு கருட வாகனத்திலும், இரண்டாம் நாள் அஸ்வ வாகனத்திலும் எழுந்தருள்வார். இந்த 3 நாள் திருக்கல்யாணத்தை யொட்டி தினமும் நடைபெறும் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.