இலங்கையில் மக்கள் போராட்டம் வலுக்கும் நிலையில், அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே மகிந்த ராஜபக்சே வெளியேறினார். இலங்கையில் போராட்டகாரர்கள்- முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மோதல் காரணமாக இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உள்பட இதுவரை 7 பேர் பலி பலியாகியுள்ளனர். இன்னும் ஓயாமல் போராட்டம் வெடித்து வருகிறது.
இந்நிலையில் காவல்துறைத் தலைவர், ராணுவ தளபதிக்கு மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறியது குறித்து வரும் 12ஆம் தேதி விளக்கமளிக்க ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.