Categories
உலக செய்திகள்

தலைதூக்கிய கொரோனா…. அமலில் உள்ள ஊரடங்கு…. வீழ்ச்சியடைந்த வர்த்தகம்….!!

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொழில் நகரங்களில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்  வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

உலகில் பெருமளவில்  அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக சீனா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா நோய் தொற்று மீண்டும்  தலைதூக்கி இருப்பதால் அங்கு பொருளாதார வர்த்தகமானது சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் ஏப்ரல்  மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 27 ஆயிரத்து 360 டாலராக இருந்தது. இதனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் கணக்கிடும்போது 3.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுமதி 15.7 சதவீத வளர்ச்சியை கண்டிருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. அதே சமயத்தில், பிற நாடுகளில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது சற்று அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து சீனாவில் முக்கிய தொழில் நகரமான  தொற்று பரவலை  கட்டுப்படுத்த  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக, ஷாங்காயில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் “கொரோனா பூஜ்யம்” என்ற நிலையை உருவாக வேண்டும் என்பதிலும் சீன அதிபர் ஜின்பிங் உறுதியாக உள்ளார். இதனால் இந்த நகரில் பாதிக்கு மேற்பட்டோர் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனை அடுத்து தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டும் முதலீட்டாளர்கள் கவலை அடைந்தும் உள்ளனர். இந்நிலையில் கார்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் இதர தொழில்துறைகளில் உலகளாவிய வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

உலக அளவில் சீனா நாட்டில்  பரபரப்பாக  இயங்கி வந்த ஷாங்காய் துறைமுகம், தற்போது வழக்கம்போல் இயங்கி வந்தாலும் சரக்குகளை கையாள்வதில் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாக செயல்பட்டு வருகிறது. இந்த சரக்குகளை கொண்டு செல்ல லாரி டிரைவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று பயந்து ஷாங்காய் துறைமுகத்தில் கப்பல் நிறுவனங்கள் தவிர்க்கின்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா நாட்டின் பணவீக்கமும், வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும் நிலையில் சீன பொருட்களின் தேவையானது சரிந்துள்ளது. இந்த காரணத்தினால் சீனாவின் வர்த்தகம் வீழ்ச்சியடைந்து நடப்பு காலாண்டிலும் இந்த சரிவு தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Categories

Tech |