Categories
உலக செய்திகள்

மனைவியை தன் தோளில் சுமந்துகொண்டு ஓடும் கணவர்கள்…. ஹங்கேரியில் தூள் பறக்கும் ஓட்டப்பந்தயம்….!!!!

பொதுவாக ஒரு ஓட்டப்பந்தயத்தை பார்க்கும்போது, வீரர்கள் தன் இலக்கை அடைவதற்கு எவ்வாறு முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாக தெரியும். அத்துடன் அவர்கள் ஓடுவதை பார்க்கும்போது வியப்பாக இருக்கும். அவ்வாறு இருக்கும்பொது உடன் ஒருவரை முதுகில் சுமந்து கொண்டு ஓடுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் இதுபோன்ற ஒரு ஓட்டப்பந்தயத்தை ஹங்கேரியில் நடத்தி வருகின்றனர்.
அதாவது கணவன் மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் போட்டியானது அங்கு நடத்தப்படுகிறது. இப்போட்டியில் 30-க்கும் அதிகமான ஜோடிகள் கலந்துகொண்டனர். அப்போது கணவன் தனது மனைவியை முதுகில் தூக்கிக் கொண்டு சேறு, சகதி, டயர் ஆகியவற்றை கடந்து ஓடும் காட்சியை பார்க்கும்போது வேடிக்கையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. அவ்வாறு இந்த போட்டி நடைபெற்றதற்கு முக்கிய காரணம், தம்பதிகளிடையே புரிதல் தன்மை அதிகரிப்பதற்காகவே என்று கூறப்படுகிறது.

Categories

Tech |