தமிழக முதல்வர் ஸ்டாலின் களமிறக்கிய ஸ்பெஷல் டீம் ஒன்று அவருக்கு அளித்துள்ள ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என கடந்த வருடம் இதே மாதம் 7 ம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார். அரசியல் சாணக்கியர் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்தித்த பத்து வருடங்களுக்கு பின் ஆட்சியை பிடித்திருக்கிறது திமுக. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அவர் முன் நின்ற சவால்கள் அதிகம். அவைஅனைத்தையும் கடந்து இன்னமும் கடந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதேநேரம் ஆட்சிக்கு எந்த விதத்திலும் அவப் பெயர் வந்து விடக்கூடாது என்பதிலும் முதல்வர் ஸ்டாலின் மிகவும் கவனமாக இருக்கின்றார். மேலும் அடுத்த பத்து வருடங்களை குறிவைத்து ஸ்டாலின் செயலாற்றி வருவது அவரது செயல்பாடுகள் சுட்டிக் காட்டுகின்றது. இவை அனைத்து வகையான விமர்சனங்களுக்கும் செவிமடுத்து அவர் செயலாற்றுவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இருந்தாலும் விதிவிலக்கல்ல என்பது போல திமுக ஆட்சி மீதான சில விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றது.
இந்த நிலைமையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. மேலும் பதவியேற்றபோது கொரோனா காரணமாகவே எளிமையான முறையில் பொறுப்பேற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். அதனால் ஒராண்டு நிறைவு விழாவினை உடன்பிறப்புகள் அமர்க்களப்படுத்தி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதுவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் இது பற்றிய அறிவாலய முக்கிய புள்ளி ஒருவரிடம் கேட்கும் போது, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில்தான் முதலாமாண்டு நிறைவு விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டிருக்கிறது. மேலும் பெரிய விழாவாக கொண்டாட வேண்டாம் நலத்திட்ட உதவிகள் செய்த ஆட்சியின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சென்றால் போதும் என முதல்வர் கூறியுள்ளார்.
அதனால்தான் எளிய முறையில் கொண்டாட பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி பற்றி பல்வேறு ரிப்போர்ட் வந்து கொண்டிருக்கின்றனவே என அவரிடம் கேட்கும்போது இது எல்லாம் என்ன ரிப்போர்ட். தளபதியே டைரெக்ட்டா ஒரு டீம்ம வச்சு ரிப்போர்ட் வாங்கிட்டாரு என்று பரபரப்பை அதிரவைத்தார். அது குறித்து அவரிடம் விசாரித்த போது, ஆட்சி நன்றாக இருக்கிறது. மக்கள் இடத்தில் நல்ல பெயர் இருக்கின்றது. வரவேற்பு இருக்கு என்று உளவுத்துறை ஓர் ஆண்டுக்கான அறிக்கையை வழக்கம்போல தளபதியிடம் கொடுத்திருக்காங்க.
மேலும் இதில் அவருக்கு சந்தோஷம் தான் இருந்தாலும் உண்மையான கருத்தை தெரிஞ்சுக்கணும். அதனால் கடந்த மாதம் கடைசியில் ஒரு ஸ்பெஷல் டீம் களமிறக்கிட்டாரு தளபதி என கூறியுள்ளார். மேலும் திமுக ஐடி விங் மேற்பார்வையில் தனியார் அமைப்பு ஒன்றின் மூலமாக அனைத்து தொகுதிகளிலும் தொகுதிக்கு 10 பேர் கொண்ட டீம் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள். எந்தவிதமான தலையீடும் இல்லாமல் தனித்தே அந்த குழுவினர் திமுக தலைமை கொடுத்த கேள்விகளை சர்வேயாக எடுத்திருக்கின்றனர். கட்சி சாராமல் சாமானிய மக்களிடம் மட்டுமே அவர்களை தொந்தரவு செய்யாமல் கேள்வி கேட்டு குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் திமுக ஆட்சி மிகவும் நன்றாக இருக்கிறது என 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பதிலளிக்கின்றனர். இந்நிலையில் அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற கேள்விக்கு 85 சதவீதத்திற்கும் மேலான திமுகவிற்கு என பதிலளித்து இருப்பதாக தெரியவந்திருக்கிறது. அதேசமயம் குறையும் இருக்கும் அல்லவா அது பற்றிய கேள்விக்கு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இன்னமும் கொடுக்கப்படாததை பலரும் சுட்டிக் காட்டி தெரிவித்துள்ளனர். திமுக அரசின் சாதனையாக பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை தான் பெரும்பாலானோர் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் மற்ற திட்டங்கள் பெரிதாக மக்களிடம் செல்வாக்கை பெறவில்லையாம். அதேபோல நரிக்குறவர்கள் ஸ்டாலின் செய்த நல்ல திட்டங்களையும் சிலர் பட்டியலிட்டு பாராட்டி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த ரிப்போர்ட்டை ஸ்டாலின் படித்துப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறாராம். இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் பூரித்து பேசிய ஸ்டாலின் மக்களுக்கு இன்னமும் நல்லது செய்ய வேண்டும் என மனம் நெகிழ்ந்ததாக தெரிவிக்கின்றார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி அறிவாலயத்தில் கட்சியின் சீனியர் நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசித்த ஸ்டாலின் கீழ் மட்டம் வரை அனைவரும் உழைக்க வேண்டும்.மேலும் மக்களுக்கு ஆட்சி மீது அதிருப்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் 2024 ஆம் வருடம் மக்களவை தேர்தலில் மட்டுமல்லாமல் அடுத்த தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு அறிவுறுத்தி உள்ளாராம்.